download

அரும்பு

அரும்பு தனித்தன்மை வாய்ந்த முழுமை மிக்க தமிழ் மென்பொருள் தொகுப்பு தமிழில் பல்வேறு மென்பொருட்களில் உள்ளீடு செய்வதற்கான தன்னிகரற்ற செயல்திறத்துடன் கூடிய ஒரு செயலி. முழுமையும் தமிழுலகிற்கு இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் விவரமறிய பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 

 

தமிழ் ஆசான்

அனைவருக்கும் எளிய முறையில் தட்டச்சு செய்வதைப் பயிற்றுவிக்கும் மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கக் கூடிய இந்த மென்பொருள் வெவ்வேறு பாட அளவுகளுடன் அனைவருக்கும் தமிழில் உள்ளீடு செய்வதற்குப் பயிற்சியளிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த சென்னைக் கவிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த மென்பொருள் பல்வேறு விளையாட்டு சார்ந்த பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளதுஇந்தச் செயலியை இயக்குவதற்கான தகவல்கள் மென்பொருளிலேயே உள்ளது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 

பால்ஸ்ஆங்கிலம் தமிழ் அகராதி

சென்னைபழனியப்பா நிறுவனத்தின்படைப்பான இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடியது பல்வேறு ஆங்கிலம் மற்றும் தமிழ்ச் சொற்களுக்கான தேடல் வசதி இந்த மென்பொருளின் சிறப்பம்சம் இந்தச் செயலியை இயக்குவதற்கான தகவல்கள் மென்பொருளிலேயே உள்ளது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

 

கணிவடிவத் தொகுப்பு

500 வடிவங்களுக்கும் மேலான கணிவடிவத் தொகுப்புகள் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டு உங்களுக்கு பயன்படுத்தத் தயாராக உள்ளன.இந்த சுருக்கப்பட்டக் கோப்பினை பதிவிறக்கம் செய்து விரிவாக்கம் செய்து தங்களின் கணிப்பயன்பாட்டின் வடிவமைப்பை மேலும் நீங்கள் செழுமைப்படுத்தலாம் (This is a compressed file format. Just download it and uncompress it to its original folders) பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

ஒலிப்பெட்டக திரட்டு

ஐந்துசிறார்களுக்கானத் தமிழ்க்கதைகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன . நீங்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்து mp3 ஒலிவடிவத்தினை இயக்கக் கூடிய எந்த சாதனங்களிலும் பயன்படுத்தலாம் உதாரணமாக கைபேசி mp3 ஒலிப்பான், கணினி மற்றும் இவைபோன்ற அனைத்து சாதனங்களிலம் குழந்தைகளுக்கு இயக்கிக் 0காட்டலாம் கூடிய விரைவில் மேலும் அதிகமான கதைகளையும் பாடல்களையும் வலையேற்றம் செய்வோம் என உறுதி கூறுகிறோம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

GET THE BEST HOT DEALS
தமிழால் ஒருங்கிணைந்தோம் ,விரைவில் உலகத் தமிழர்களுக்கான அனைத்து மென்பொருள் தேவைகளையும் அளிப்போம் என்கிற உறுதியுடன் எமது பயணத்தைத் துவங்குகிறோம் தளிர் நடையாகத் துவங்கினாலும் களிற்றின் நடையாக மாறிடும் இந்நன்னாளில் தங்களின் ஆதரவும் ஆசியுடனும் சற்றே காத்திருக்கவும்