ABOUT US

1995 ம் ஆண்டு மத்தியிலிருந்து தமிழ் கணிமையில் சிங்கப்பூர் முன்னோடியாக இருந்துவருகிறது. அமரர்.நா.கோவிந்தசாமி அவர்களின் சீரிய முயற்சியில் தமிழ் மென்பொருட்களை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்துவதில் பெரும்பங்காற்றினார். கணியன் மற்றும் மன்னவன் என்ற மென்பொருள் அவருடைய முத்திரை தயாரிப்பாகும்

ஆனால் இன்றைக்கு ஒருங்குறியீடு (யூனிகோடு) முறை இணையம் மற்றும் பதிப்பித்தல் துறைக்கான தீர்வாக

அமைந்துவிட்டது. அந்தவகையில் உலகத் தர நிர்ணயத்திற்கேற்ப சிங்கப்பூரிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தின் அத்தியாவசியச் சூழல் ஏற்பட்டுள்ளது

1998 லிருந்து "இணையத்தில் தமிழ்" என்ற பயிற்சிப் பட்டறைகளை ஒரு தன்னார்வலர் குழு துவக்கி நடாத்தியதை அனைவரும் அறிவர். சமுதாய அரங்குகளிலும் பல்வேறு கூட்ட மண்டபங்களிலும் நிகழ்ந்த இந்தப்பணியை எவரும் எளிதில் மறந்துவிட இயலாது.

குறிப்பாக தமிழ் மென்பொருட்களை கணினியில் தரவிறக்கம் செய்வது மற்றும் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பது போன்றவற்றை குறுகிய மூன்றாண்டுகளில் சுமார் 3 ,500 பேர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களைக் கொண்டே இந்தப் பயிற்சியை திறம்படச் செய்தோம்.

கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் சிங்கப்பூர் சமுதாயத்துக்கு தவிர்க்க

இயலாத் தேவை என்பதை தெளிவாக உணர்ந்தே இருந்தோம்.

மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில இது தேவையான ஒன்று என்பதும் எங்கள் சிந்தனையில் இருந்ததது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டில் நமது உள்ளூர் சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப தீர்வினை ஏற்படுத்த வேண்டியதின் அவசியத்தை பெரிதும் உணர்ந்திருந்தோம். அந்த அடிப்படையில் 2010 ம் ஆண்டில் மிகுந்த மகிழ்வோடு எமது நிறுவனத்தால் விண்டோஸ் எக்ஸ்.பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 க்காக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான பத்து தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் வெள்ளோட்டமாக வெளியீடு காண்பதில் பெருமகிழ்வேய்துகிறோம்.

இது ஒரு தொடக்கம்தான்! தமிழ் கணிமையின் பயன்பாட்டுக்கான புதுமையான ஆயத்தப்படம் ( கிளிப் ஆர்ட்ஸ்),பார்டர்கள் போன்ற பிற தயாரிப்புகளும் எம்மிடமுள்ளது. அதுமட்டுமல்ல பல்வேறு மொழிகளுக்கான அகராதிகள் மாறுபட்ட அமைப்பில் தமிழ் சீன,மற்றும் மலாய் போன்ற பல் கலாச்சார சமூகத்துக்கும்அளிக்கவுள்ளோம்.

எமது கொள்கை

எமது கணித்தமிழ் நிறுவனம் இணைய உலகில் தனி முத்திரை பதிக்கும் அளவுக்கு அடுத்தடுத்து கணியுலகுக்கு தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்வண்ணம் தனது முதற்படியை எடுத்துவைத்துள்ளது என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

 

GET THE BEST HOT DEALS
தமிழால் ஒருங்கிணைந்தோம் ,விரைவில் உலகத் தமிழர்களுக்கான அனைத்து மென்பொருள் தேவைகளையும் அளிப்போம் என்கிற உறுதியுடன் எமது பயணத்தைத் துவங்குகிறோம் தளிர் நடையாகத் துவங்கினாலும் களிற்றின் நடையாக மாறிடும் இந்நன்னாளில் தங்களின் ஆதரவும் ஆசியுடனும் சற்றே காத்திருக்கவும்